Yuvan Shankar Raja Musical event in Dubai Stadium is Empty!!
Sponsored Links:
Yuvan Shankar Raja Musical event in Dubai Stadium is Empty!!
“ஒரு சினிமா ஜெயிக்க எவன் இல்லேன்னாலும் பரவாயில்லை. யுவன் இருந்தா போதும்” என்று அடிக்கடி சொல்வார் நடிகர் பார்த்திபன். அப்படிப்பட்ட யுவனுக்கு துபாய் ட்ரிப், படுமோசமான அனுபவத்தை கொடுத்திருக்கிறது. இந்த குட்டி மேஸ்ட்ரோவின் பெரும் கனவில் ஒன்றுதான் உலகத்தை சுற்றி வந்து இசை நிகழ்ச்சி நடத்த வேண்டும் என்பது. முதலில் துபாய். அதன்பின் இதே பிரமாண்டத்துடன் ஒன்பது நாடுகள் சுற்றி வருவது என்று திட்டம் வைத்திருந்தாராம். அவ்வளவும் கனவாச்சு இப்போது.
சுமார் 30 ஆயிரம் பேர் அமரக்கூடிய கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடந்தது நிகழ்ச்சி. ஆனால் வந்திருந்தது ஆயிரம் பேர் கூட இல்லை என்கிறது துபாயிலிருந்து வரும் மோசமான செய்தி ஒன்று. மாலை ஐந்து மணிக்கு துவங்க வேண்டிய நிகழ்ச்சியை இரவு பத்து மணிக்குதான் துவங்கினார்களாம். காலியா கிடக்குற ஆடிட்டோரியத்துல ஜாலியா பாடணும்னா முடியுமா? மக்கள் வரட்டும் என்று கூறிவிட்டாராம் யுவன். ஒருவழியாக ஸ்டேஜுக்கு வந்தால், மைக் ஒத்துழைக்கவில்லை. மறுபடியும் லேட்!
சுரத்தும் இல்லாமல், சுருதியும் சேராமல் நிகழ்ச்சியை நடத்தியிருக்கிறார் குட்டி மேஸ்ட்ரோ. சிம்புவும் போயிருந்தாரல்லவா? இரண்டே பாடல்களை பாடிவிட்டு அமர்ந்துவிட்டாராம். இவ்வளவு பெரிய நிகழ்ச்சிக்கு ஒரு தொகுப்பாளர் கூட இல்லை. அவர்களே மைக்கை பிடித்து இயந்திர கதியாக பாடிவிட்டு செல்ல, நிகழ்ச்சி முடியும்போது அநேகமாக ஸ்டேடியம் காலி.
ஏன் இப்படி? வேறொன்றுமில்லை, தமிழ்ப்பட கலைஞர்கள் வரும்போது அதற்கான டிக்கெட்டுகளை தமிழர்கள் புழங்கும் ஏரியாவில் விற்பதுதானே முறை? நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் இந்திக்காரர்கள் வசிக்கும் ஏரியாவில் டிக்கெட்டுகளை விற்பனை செய்தார்களாம். நிகழ்ச்சியில் குறைந்த விலைக்கான டிக்கெட்டே இந்திய பணத்தில் ஆயிரத்தை தாண்டியதாம். அதுமட்டுமல்ல, நிகழ்ச்சி நடந்த இடமும் துபாய் சிட்டியிலிருந்து வெகு தூரத்தில் இருந்ததாம்.
எல்லாமும் சேர்ந்து யுவனின் இமேஜில் திராவகத்தை ஊற்றியிருப்பதுதான் ஹையோடா....!
Tags : Yuvan Shankar Raja, Musical event in Dubai Stadium is Empty!!, Dubai Stadium
Save and Share!
Stumble Digg TweetSave Reddit More
Related Posts :